ஒற்றைக்கண்ணால உன்னைப் பார்த்தேனடி Lyrics
படம் : வேல்
பாடியவர் : ஹரிசரண்
இசை : யுவன்ஷங்கர்ராஜா
பல்லவி
======
ஒற்றைக்கண்ணால உன்னைப் பார்த்தேனடி ஒறங்கவில்லை என் மனசு
ஓரக்கண்ணால என்னைப் பார்த்தாயடி ஒறங்கவில்லை என் மனசு
புரியலையே புரியலையே நீ யாருன்னு புரியலயே
தெரியலையே தெரியலையே இது காதல் தான்னு தெரியலயே
தெரியாத பொண்ணப் பாத்தா புதுசாத் தான் காதல் பூக்குதே
காதல் பூக்குதே ஹே ஹே ஹே (ஒற்றைக் கண்ணாலே)
சரணம்-1
=======
ஹோ சாலையோரப் பூக்கள் எல்லாம் உன்னைப் பார்த்து விழுகிறதே
மாலை நேரப் பட்டாம்பூச்சி உன்னைப் பார்க்கத் துடிக்கிறதே
நித்தம் நித்தம் உன்னை நினைத்து ரத்தம் எல்லாம் கொதிக்கிறதே
உன்னை உன்னை நெருங்கும் போது அத்தனை நரம்பும் வெடிக்கிறதே
பெண்ணே உன் கால்தடங்கள் மண்மீது ஓவியமாய்
கண்ணே உன் கைநகங்கள் விண்மீது வெண்பிறையாய்
தெரியாத பெண்ணைப் பாத்தால் தெரியாமல் காதல் பூக்குதே
காதல் பூக்குதே (ஒற்றைக் கண்ணாலே)
சரணம்-2
========
ஹோ கோடைக்காலச் சாரல் ஒன்று என்னை விரட்டி நனைக்கிறதே
காலை நேரம் காலைத் தொட்ட பனித்துளி கூட சுடுகிறதே
மலரே மலரே உந்தன் வாசம் எந்தன் நெஞ்சை உடைக்கிறதே
அழகே அழகே உந்தன் பார்வை என்னைக் கட்டி இழுக்கிறதே
பெண்ணே உன் வாய்மொழிகள் நான் கண்ட வேதங்களா
கண்ணே உன் ஞாபகங்கள் நான் கொண்ட சாபங்களா
அறியாத பெண்ணைப் பார்த்தால் அறியாமல் காதல் பூக்குதே
காதல் பூக்குதே (ஒற்றைக் கண்ணாலே)
See also:
JustSomeLyrics
82
82.97
02.Thats Juft The Way It Is Lyrics
Chris daughtry Fall Away Lyrics